Welcome

வியாழன், 12 ஜூலை, 2018

MLM வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?


மனம் விரும்பும் பணம்

MLM வியாபாரத்தில் வெற்றி பெற்றால் என்ன கிடைக்கும் என்பதையும் அதற்கு அடிப்படையாக (Basic) என்னென்ன செய்ய வேண்டும்? என்பதையும் தெரிந்து கொண்டோம். அடிப்படையான ஆறு விசயங்களில், 
1. Dress Code & Visiting Cards
2. Make a Name list
3. Contacting & Inviting
ஆகியன பற்றி தெளிவுபடப் புரிந்து கொண்டோம்.
எத்தனை நண்பர்கள் இதனைப் படிக்கும் முன்னர், படித்த பின்னர் முறையாக முதல் மூன்று அடிப்படைகளை செய்யத் தொடங்கியுள்ளனரோ, அவர்கள் அனைவரும் பொருளாதாரச் சுதந்திரம் பெற்று, வெற்றி பெறுவது நிச்சயம்
அடிப்படையான ஆறில், அழைப்பது எப்படி, ஏன் எதற்காக என பார்த்தோ மல்லவா? இனி,
எவ்வளவு பேரினை அழைக்க வேண்டும்? இதற்கு என்ன செய்ய வேண்டும்?
பல வெற்றியாளர்களின் ஒருமித்த கருத்து என்னவெனில், நூறு சதவிகித மக்களில், இருபது சதவிகித மக்களால் எண்பது சதவிகிதம் வேலை நடை பெற்று வருகிறது என்பதுதான்.
உதாரணாக, ஒரு வகுப்பில் 100 மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஆசிரியர் சிறப்பாக போதிக்கிறார். தேர்வும் வருகிறது. தேர்வின் முடிவும் தெரிகிறது. எப்படியிருக்கும்?
முதல் 20 பேர் மிகச்சிறந்த மதிப்பெண், அடுத்து 40 பேர் சராசரியான மதிப்பெண், இன்னும் 20 பேர் Just Pass மீதி உள்ள 20 பேரோ பாஸ் மதிப்பெண் கூட பெறவில்லை. இது நடை முறையில் நடைபெறுவதுதானே? இதனை Law of Average எனவும் கூறலாம்.
இன்னுமொரு நடைமுறை நிகழ்ச்சி, விவசாயி நிலத்தை உழுது தண்ணீர் பாய்ச்சி விதைகளை தூவும் போது எல்லாவிதைகளும் பயிராகாது என்று தெரியுமாதலால், சற்று அதிகமாக விதைக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் போல, நாமும் நமது MLM வியாபாரத்திற்குத் தேவைப் படும் நல்ல தலைவர்கள் கிடைக்க சற்று அதிகமாக அழைப்பிதழ்கள் வழங்கலாமே!
உங்களின் கீழ் ஆறு பேர் வெற்றி பெற வேண்டுமா? முப்பது பேரிடம் MLM வியாபாரத் திட்டத்தைக் காட்டி, விளக்கி, இணையுங் கள். முப்பது பேர் விநியோ கஸ்தராக வேண்டுமா? சுமாராக நூற்றி ஐம்பது பேரிடம் திட்டத்தைக் காட்டுங்கள். உங்கள் அதிர்ஷ்டம் அந்த ஆண்ட வனின் அருளால் ஆறு பேர் உடனே கிடைக்கலாம் அல்லது நூற்றி ஐம்பதாவது பேர் கூட அந்த ஆறில் ஒருவராக இருக்கலாம்.
ஆகவே, இதற்காக எப்போதும்,
1. உங்கள் பெயர்ப் பட்டியல் 100 பேர்களுக்கு குறைவின்றி இருக்க வேண்டும்.
2. புதிய நண்பர்களை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
3. மக்களுடன் பழக நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்.
4. எப்போதும் வெற்றியாளராக காட்சி தர வேண்டும்.
5. அடிப்படை கடமைகளைத் தொடர்ந்து… தொடர்ந்து… செய்து வர வேண்டும், உடனடியாக பலன்களை எதிர்பாராமல்.
II. Show the plan – MLM
வியாபாரத் திட்டத்தை காட்டுதல்
பெயர்ப் பட்டியல் தயாரித்து, அவர்களை தொடர்பு கொண்டு அழைத்து என்ன செய்ய வேண்டும்?
இந்த வியாபாரத் திட்டத்தினை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக்கூற வேண்டியதுதான். இதற்கு முன்னர் செய்யும் செயல்பாடுகள் அனைத்திற்கும் பலன் கிடைக்க ஆரம்பமே Show the Plan தான்.
இதன் நோக்கம், நாம் மதிப்பிடும் நபர்கள் அவர்களது கனவுகளை, இலட்சியங்களை, இந்த MLMவியாபாரத் திட்டத்தின் மூலம் எளிதில் அடைய முடியும் என்ற ஆர்வம் ஏற்படும் வகையில் சுருங்கக் கூறுவதே ஆகும்.
இந்தத் திட்டத்தினை பார்த்துச் செல்பவர் களிடம் உரிய ஆதாரங்களையும் ஆடியோ கேசட்டுகளையும் கொடுத்து, அவர்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
திட்டத்தைக் காட்டுதல் நான்கு வழிகளில் செய்யலாம். எப்படி?
1. ஆர்வமிகு முறை (Quriosity Plan).
2. நேருக்கு நேர் (One to One Plan).
3. இல்லத்தில் சந்திப்பு (Home meet).
4. வாராந்திர கூட்டம் (Weekly Meeting).
இந்த நான்கு வழிகளிலும் சொல்லப்பட வேண்டிய விசயங்கள்
1. ஏன் இந்த வியாபாரம் செய்ய வேண்டும்?
2. 2-5 ஆண்டுகளில் வரக்கூடிய வருமானம் எவ்வளவு?
3. நிறுவனத்தால் எப்படி விநியோகஸ்தர் களுக்கு இவ்வளவு வருமானம் வரும் வகையில் பணம் கொடுக்க முடிகிறது.
4. எல்லோருக்கும் பணம் வரக்கூடிய MLM வியாபார திட்டம்.
5. எப்படி? எப்படி? வியாபாரம் செய்ய வேண்டும்? இவைகளை சொல்லும் இடம், காலம், நபரைப் பொறுத்தும், கேட்கும் நபரின் ஆர்வம் பொறுத்தும் சுவை கூடும், குறையும்.
சொலல்வல்லான் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது
– குறள்
இதன்படி திட்டத்தைக் காட்டுதலில் நீங்கள் முதல்வராக இருக்க வேண்டும்.
1. ஆர்வமிகு முறை (Quriosity Plan)
வாழ்வில் முன்னேற முடிவெடுத்து வாய்ப்புக்காக காத்திருக்கும் வாய்ப்பாளருக்கு, இந்த முறையில் கூறினால், தொடர்ந்து அதிகமான விபரங்ளை பெறும் ஆவலுடன் இல்லக் கூட்டத்திற்கோ / வாராந்திர கூட்டத்திற்கோ தவறாது வருவார்.
சுமார் 20 முதல் 30 நிமிடங்களில் இந்த முறையில் ஆர்வம் மிக்க விசயங்களை மட்டும் தெரிவித்தால் போதுமானது. இதனை அவரவர் இல்லத்திலேயோ / சந்திக்கும் இடத்திலேயோ எந்தவித சிக்கலுமின்றி எளிமையாகச் செய்யலாம்.
புதிதாக இணைந்தவர்கள் இந்த முறையினை கற்றுக் கொண்டு செயல்படுவது எளிதாகும். மேலும், நேரம் வீணாகாமல், விரைவில் அடுத்தடுத்த நபர்களுக்கு திட்டத்தைக் காட்டலாம்.
1. உங்களுக்கும், வாய்ப்பாளருக்கும் இடையே பொதுவாக இருக்கும் குடும்பம், வீடு, தொழில், பொழுதுபோக்கு குறித்து பேச்சினை தொடங்கவும்.
2. இந்த வியாபாரத்தில் எப்படி நீங்கள் இணைந்தீர்கள் என்றும், உங்களுக்குப் பிடித்த காரணம் எதுவென்றும் ஆர்வத்துடன் சுருங்கக் கூறவும்.
3. நடைமுறை வியாபாரம் Vs மல்டிலெவல் மார்க்கெட்டிங் வியாபாரம் வேறுபாடுகளை புரிய வைக்க வேண்டும்.
4. உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஆர்வமிருந்தால், கற்றுக்கொள்ள விருப்ப மிருந்தால், நீங்கள் வெற்றி பெற வழி காட்டுவோம் என எடுத்துக்கூற வேண்டும்.
5. எங்களுக்காக இணைய வேண்டாம். உங்களுக் காக எங்களுடன் இணைந்து செயல்பட்டு வெற்றி பெறுங்கள் எனக்கூற வேண்டும்.
6. எளிமையான முறையில் சொந்த உபயோகம், பிறரை வாங்க வைத்தல், நெட்வொர்க் அமைத்தல் இவற்றின் மூலம் மிகப்பெரிய வியாபார அளவை அடைந்து அதன் மூலம் மிகப் பெரிய வருமானம் அடைய முடியும் என்பதைக் கூற வேண்டும்.
7. மிகவும் நேர்மையான வழியில், மற்றவர்களை முன்னேறச் செய்து நாமும் வருமானம் பெறக் கூடிய வியாபாரம் என்பதைக் கூற வேண்டும்.
இதற்கு மேலும் அவர்கள் விபரங்கள் கேட்கும் பொழுது மிகவும் சந்தோசத்துடன் அடுத்த இல்ல சந்திப்பிற்கோ, வாராந்திர சந்திப்பிற்கோ வருமாறும் அன்புடன் அழைக்க வேண்டும்.
2. நேருக்கு நேராய் வரட்டும், நெஞ்சில் கனவிருந்தால் (One to One Plan)
தம்பதியராய் இருப்பின் இருவரையும், தனி நபராக இருப்பின் அவரையும் அழைத்து திட்டத்தை அறிமுகப்படுத்தும் முறை.
இதற்கு நீங்கள் கற்றுக் கொள்ளும்வரை உங்களது ஸ்பான்ஸர் உதவி இதற்குத் தேவை. குழுவாகக் கூடிப் பேசுவதைக் காட்டிலும் குறிப்பாக அவர்களுடன் பேசி விளக்கும் இம்முறையால் நல்ல பலன் கிடைக்கும். இந்த சந்திப்பினை உங்களது
இடத்திலோ அல்லது அவர்களது இல்லத்திலோ, பொதுவான இடத்திலோ ஏற்படுத்தலாம்.
என்னைப் பேசச் சொன்னால் என்ன பேச வேண்டும் என்பவர்களுக்காக
1. உங்கள் ஸ்பான்ஸர் / அப்லைன் உடனிருந்து பேசினால், நீங்கள் எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் கவனித்துக் கேளுங்கள்
2. ஸ்பான்ஸர் / அப்லைன் திட்டம் காண்பிப்பதை இயன்றால் ஒலிநாடாவில் பதிவு செய்து கொள்க. பிறகு உங்கள் மனதில் பதிவு செய்ய வசதியாக இருக்கும்.
3. நீங்களே திட்டத்தைக் காட்டும் பொழுது, அவர்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில், சுருக்கமாக, இனிமையாக, எளிமையாகக் கூறவும். அனைத்தையும் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தினால் அதிக நேரம் சொல்வது ஆபத்தானது.
4. வியாபாரத் திட்டத்தை காட்டிய பின்னர் சாதனையாளர்களின் சரித்திரங்களையும் ஆதாரங்களையும் எடுத்துக்காட்டி VCR/CD உதவியுடன் விளக்கலாம்.
5. அதிகமாக கேள்வி கேட்பவர்களை தனிப் பட்டியலிட்டு அவர்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுங்கள். ஏனெனில் நாளைய சாதனையாளர்கள் இவர்களே.
Learners are Leaders.
6. உங்களுக்கு, பதில் தெரியாத கேள்விகளுக்கு சமாளித்தல், மறுத்தல், விவாதம் செய்தல் இவை போன்று ஏதும் செய்யாதீர்கள். அப்லைன் உதவியுடன் தெரிந்து கூறுவதாக அன்புடன் சொல்லுங்கள்.
7. வியாபாரத் திட்டத்தை சொல்லி முடித்தவுடன் அவர்கள் சந்தேகங்கள் தீர படிக்க, கேட்க, பார்க்க உதவும் புத்தகங்கள், கேசட்டுகள், CD’s அகியவற்றைக் கொடுத்து, திரும்ப (பெற) சந்திக்க தேதி குறிக்கவும்.
8. தொடர்ந்து அடுத்து நடைபெறவுள்ள இல்ல சந்திப்பு (Home Meet) (or) வாராந்திர கூட்டம் (Weekly Meeting) வருமாறு அழைத்து மேலும் விளக்கம் பெறலாம் எனக் கூறவும்.
9. மேலும், தொடர்ந்து அடுத்து நடைபெறவுள்ள சாதனைக் கருத்தரங்கம், Business Building
Seminars (BBS) போன்றவற்றிற்கு அன்புடன் அழைத்து வரவும்.
நண்பர்களே நன்றாக நினைவு கொள்ளுங்கள்
சாதாரணமாக, ஒரு சுவற்றில் ஆணி அடிப்பதில்கூட தொடர்ந்து… தொடர்ந்து பலமுறை அடித்தாலே பலன் கிடைக்கிறது.
எனவே, தொடர்ந்து, தொடர்ந்து கூட்டத்திற்கு வரும் வாய்ப்பாளர்கள் அனைவரும் விநியோகஸ் தர்களே!
தொடர்ந்து, தொடர்ந்து கூட்டத்திற்கு வரும் விநியோகஸ்தர்கள் அனைவரும் நாளைய சாதனையாளர்களே!
வருங்கால பொருளாதார சுதந்திர மன்னர்களே!
இனி, இல்ல சந்திப்பு பற்றியும், வாராந்திர கூட்டம் பற்றியும் வரும் மாதங்களில் வரிசையாகப் பார்ப்போம்?
வறுமை எனும் நரகாசுரனை, வளமை எனும் வாள் எடுத்து சீவிட, பெருமை பெற்ற வியாபாரத்தினைப் பற்றி பெரிதும் தெரிந்திட, திரும்பவும் தீபாவளி மாதத்தில் சந்திப்போமா, சிந்திப்போமா,
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
வழிகாட்டுதல் தொடரும்…
இணைந்த கரங்கள் எதையும் சாதிக்கும்

Author: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக